×

கலவை பகுதி சாலையில் குப்பை கழிவுகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி

கலவை: கலவை பகுதி சாலையில் குப்பை கழிவுகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளில்  குப்பை கழிவுகளை அகற்ற டெண்டர் விடப்பட்டு, தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. பேரூராட்சியில் தூய்மை  பணியாளர்கள் வீடு வீடாக  சென்று குப்பைகளை சேகரித்து அதை  திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சென்று   மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரிக்க வேண்டும். ஆனால் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் கலவையின் முக்கிய சாலையான  வாழப்பந்தல், செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாழப்பந்தல்  சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர் என ‘‘தினகரன்’’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவின்பேரில் பேரூராட்சி செயலாளர் ரேவதி, குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்களிடம் கூறினார். இதையடுத்து தூய்மை பணியாளர் வாழப்பந்தல் சாலையில் கொட்டிய குப்பை கழிவுகளை அகற்றினர். இதைப்பார்த்த அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்….

The post கலவை பகுதி சாலையில் குப்பை கழிவுகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mutiny Cleanup ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...