×

கழுகுமலை காட்டுப்பகுதியில் ஆண் எலும்புக்கூடு மீட்பு: கொலையா? போலீஸ் விசாரணை

கழுகுமலை: கழுகுமலை அருகே காட்டுப் பகுதியில் முதியவர் சடலத்தை எலும்புக்கூடாக மீட்டுள்ள போலீசார், இறந்தவர்  கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கே. துரைச்சாமிபுரத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் பணி கடந்த இரு நாட்களாக நடந்து வருகிறது. நேற்று காலை இயந்திரம் மூலம் அறுவடை பணி மேற்கொண்டபோது துரைசாமிபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமியின் மக்காச்சோளம் பயிரிட்ட காட்டுப் பகுதியில் மனித எலும்புக் கூடு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஊர் மக்கள் விஏஓ கணேசன் மற்றும் கழுகுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நெல்லை தடயவியல் துறை உதவி இயக்குநர் கலா லட்சுமி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதில் இது 55 வயது மதிக்கத்தக்க முதியவரின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த கழுகுமலை போலீசார், இறந்துக்கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது….

The post கழுகுமலை காட்டுப்பகுதியில் ஆண் எலும்புக்கூடு மீட்பு: கொலையா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kalgumalai forest ,Kalgukumalai ,Kalkumalai ,Dinakaran ,
× RELATED கழுகுமலை அருகே கோயில் கொடை விழா:...