×

ஊராட்சி செயலாளர் பதவி வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர்: கடம்பத்தூர் வைஷாலி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகியாக உள்ளார். இவரிடம் கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சி ரமேஷ்(38) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அதிமுக நிர்வாகி ரமேஷ் வியாபாரம் செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது என கூறி ₹3 லட்சத்தை பெற்றுக் கொண்டுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு வியாபாரத்தில் பார்ட்னராக சேர்த்துள்ளார். இந்நிலையில், மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு அதிமுக நிர்வாகி ரமேஷ் ஊராட்சி செயலாளர் வேலை வாங்கித் தருவதாக செஞ்சி ரமேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் தன் மனைவிக்கு ஊராட்சி செயலர் பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கொண்டு ₹4 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அதிமுக நிர்வாகி ரமேஷ் 3 ஆண்டுகளாகியும் இதுநாள் வரையிலும் ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி தராமலும், தான் ஏற்கனவே கொடுத்த ₹3 லட்சம் உள்பட ₹7 லட்சத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.இதனால் மனவேதனையடைந்த செஞ்சி ரமேஷ், அதிமுக நிர்வாகியின் ரமேஷ் வீட்டிற்கு சென்று தனது மனைவிக்கு ஊராட்சி செயலாளர் பதவி வாங்கித்தர வேண்டும் என்றும், இல்லை என்றால் தனக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அதிமுக நிர்வாகி ரமேஷ் பணம் தர மறுப்பு தெரிவித்து செஞ்சி ரமேசை தகாத வார்த்தையால் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். புகாரின்படி கடம்பத்தூர் போலீசார் ரமேஷை தேடி வருகின்றனர்….

The post ஊராட்சி செயலாளர் பதவி வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Panchayat ,AIADMK ,Tiruvallur ,Ramesh ,Kadambathur Vaishali ,Kadambatur Union ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...