×

விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சோமனூரில் கடையடைப்பு போராட்டம்

சோமனூர்: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சோமனூரில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் சோமனூர், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், காரணம்பேட்டை, தெக்கலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவுடன் முழு அளவில் கடையடைப்பு நடைபெற்றது.விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த ஜனவரி 9ம் தேதியிலிருந்து 48 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வராததால் தற்போது 4வது நாட்களாக காரணம்பேட்டை உண்ணாவிரத போராட்டத்தில் விசைத்தறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி தலைமையில், நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், 1000 பெண்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.சோமனூர் ரகத்திற்கு அரசு அறிவித்த 23 சதவீதமும், இதர ரகத்திற்கு 20 சதவீதமும் ஒப்பந்த கூலியை பிடித்தம் இல்லாமல் ஒப்பந்த வடிவில் கையொப்பமிட்டு கூலி உயர்வை அமல்படுத்த வேண்டி நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து விசைத்தறி சார்ந்த பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூலி உயர்வு போராட்டத்தில் அரசு தலையிட்டு விரைவில் முடித்து தர வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி தமிழக அரசு விரைவில் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்….

The post விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சோமனூரில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Somanur ,Coimbatore ,Tirupur District Weaving Power Weaving Association ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...