×

3வது முறை ரீரிலீசாகும் வசந்த மாளிகை

சென்னை: சிவாஜி கணேசன் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று ‘வசந்த மாளிகை’. 1972ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜியுடன் வாணி, கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.எஸ்.ராகவன், காந்த் உள்பட பலர் நடித்திருந்தனர். கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார், கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், ஏ.வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தை 2013ம் ஆண்டு மீண்டும் வெளியிட்டார்கள். அப்போதும் பெரும் வசூலை குவித்தது.

அதன்பிறகு நவீன முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 2019ம் ஆண்டும் இரண்டாவது முறையாக வெளியிட்டார்கள். அப்போதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதை கொண்டாடும் வகையில் தற்போது 3வது முறையாக வெளியிடுகிறார்கள். நாளை (21ம் தேதி) 100 தியேட்டர்களில் வெளியாகிறது. ரவி சத்யசாய் பிலிம்ஸ் சார்பில் பி.நாகராஜா, டிஜிட்டல் முறையில் இந்த படத்தை வெளியிடுகிறார்.

The post 3வது முறை ரீரிலீசாகும் வசந்த மாளிகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : House ,Chennai ,Sivaji Ganesan ,Majali ,Sivaji ,Vani ,K. Balaji ,Major Sundarrajan ,Nagesh ,V.S. Raghavan ,Kant ,KS Prakashrao ,KV Mahadevan ,Vasantha Maligai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்