×

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு

சென்னை: ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரி ராஜ் சிங் தலைமையில் நேற்று தென்மாநிலங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார்.  ஒன்றிய அரசின் ஊராட்சித் துறை உயர்  அலுவலர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  இயக்குநர் பிரவீன் பி.நாயர் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 15வது நிதிக்குழு மானிய பணிகள், தேசிய கிராம சுயாட்சி திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், கிராம சபைகளின் சிறப்பான செயல்பாடு, சுவமித்வா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் சிறந்த செயல்பாடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சி மற்றும் முன்னோடி செயல்பாடுகள் மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஆகியவை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இதையடுத்து, ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கிரி ராஜ் சிங் தமிழ்நாட்டின் செயல்பாட்டினை பாராட்டினார். மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற கட்டிடங்கள், இணைய வழி செயல்பாடு ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்….

The post தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Tamil Nadu ,Chennai ,Union Rural Development Minister ,Giri Raj Singh ,Dinakaran ,
× RELATED ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர்...