×

இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து-பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருப்பூர் : திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.திருப்பூர் இடுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே அடிக்கடிமோதல் ஏற்பட்டு பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே மாணவர்கள் இரு தரப்பினராக பள்ளியில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஒரு மாணவரை, மற்றொரு மாணவர் பென்சில் சீவும் சிறிய அளவிலான கத்தியால் குத்தியுள்ளார். ரத்தம் வழிந்த நிலையில் அந்த மாணவரை மீட்டு, பள்ளி ஆசிரியர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் பலர் நேற்று பள்ளிக்கு வந்தனர். கத்தியால் குத்திய மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.இதன் பின்னர் பெற்றோர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்….

The post இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து-பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Ituvampalayam Government High School ,Tirupur ,Tirupur Iduwampalayam Government Higher Secondary School ,Iduvampalayam government high school ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்