×

1 வருடத்துக்கு பிறகு இன்ஸ்டாகிராமுக்கு திரும்பினார் அமலா பால்

சென்னை: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வருடத்திற்கு மேல் எந்தவித பதிவுகளும் வெளியிடாத நிலையில் இப்போது திரும்பி வந்துள்ளார். வெள்ளை காஸ்ட்யூமில் கிளாமரில் கலக்கிய அமலா பாலின் புத்தம் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ஒன்றரை லட்சத்திற்கு அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது. மேலும், ‘தலைவி ரிட்டர்ன்ஸ்’, ‘குவின் இஸ் பேக்’ போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு வருடத்துக்கு முன் வரை அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை அவர் பதிவிட்டு வந்தார். மது குடிக்கும் புகைப்படங்களையும் சிகரெட் பிடிக்கும் படங்களையும் வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். பிருத்விராஜ் ஜோடியாக அமலாபால் நடித்த ‘ஆடு ஜீவிதம்’ மலையாள படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆனால் தமிழ் மற்றும் மலையாளத்தில் அமலாபாலுக்கு மீண்டும் வாய்ப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.

The post 1 வருடத்துக்கு பிறகு இன்ஸ்டாகிராமுக்கு திரும்பினார் அமலா பால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amala Paul ,Chennai ,Instagram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி