×

இந்தியாவிலும் கலக்கல் மிஷன் இம்பாசிபிள் ஆறு நாளில் ரூ.71 கோடி வசூல்

மும்பை: டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் (பாகம் 1)’ இந்தியாவில் வெளியான ஆறு நாட்களில் ரூ.71 கோடி வசூலித்துள்ளது. ஹாலிவுட் ஆக்‌ஷன் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்களுக்கு எப்போதும் இடம் உண்டு. 1996 முதல் வெளியாகி ஆக்‌ஷன் ரசிகர்களை வியக்க வைக்கும் இதன் முந்தைய பாகங்கள் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ ஏழாவது பாகமான ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

டாம் குரூஸ் மற்றும் ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களுக்கு இந்தியாவில் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால் இப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. படமும் நேர்மறை விமர்சனங்களைப் பெற்று வருவதால் இந்தியாவில் இப்படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.71 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதையடுத்து இந்த வாரத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரியும் படமாக இது மாற உள்ளது. உலக அளவில் ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங்- 1’ இதுவரை 6.3 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் இப்படம் 2.3 கோடி டாலர்கள் வசூலித்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இந்தியாவிலும் கலக்கல் மிஷன் இம்பாசிபிள் ஆறு நாளில் ரூ.71 கோடி வசூல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chalkal ,India ,Mumbai ,Tom Cruise ,Hollywood ,Kollywood Images ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...