தமிழில் ‘காசி’, ‘நாளை நமதே’, ‘ரேனிகுண்டா’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘கொடிவீரன்’ போன்ற படங்களில் நடித்தவர், மலையாள நடிகை சனுஷா. மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அவர், 2012ல் வெளியான ‘மிஸ்டர் மருமகன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். சில ஆண்டுகள் வரை சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அவர், 6 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் ‘ஜலதாரா பம்ப்செட் சின்ஸ் 1962’ என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் சினிமாவை விட்டு விலகியிருந்தேன் என்பது தவறான தகவல். கன்னடம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். மலையாளத்தில் திடீரென்று இடைவெளி ஏற்பட்டது. ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். ‘ஜலதாரா பம்ப்செட் சின்ஸ் 1962’ படத்தில், அனுபவம் மிகுந்த ஊர்வசியுடன் இணைந்து நடிக்கும்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இனி அடிக்கடி என்னை மலையாளத்தில் பார்க்கலாம். மற்ற மொழிகளிலும் தீவிர கவனம் செலுத்தி நடிப்பேன்’ என்றார்.
The post மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகை சனுஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.