×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி தேர்தலில் அதிமுக தம்பதி வெற்றி

திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி வெற்றி பெற்றனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. அதன் வாக்குகள் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது.  இந்நிலையில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. அதிமுக சார்பில் 12வது வார்டில் ராமகிருஷ்ணன், 9வது வார்டில் அவரது மனைவி லட்சுமி என கணவன், மனைவி போட்டியிட்டனர். தேர்தலில், இவர்கள் இருவரும் வெற்றி பெற்றனர். அவர்களை, பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ள ஏ.ஜி.ரவிச்சந்திரன் உட்பட வெற்றி பெற்றுள்ள பேரூராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்….

The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சி தேர்தலில் அதிமுக தம்பதி வெற்றி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Bodaturpet municipal election ,Bodaturpet municipal council elections ,Tamil Nadu ,ADMK ,Pothatturpet municipal election ,Dinakaran ,
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...