×

பசு பாதுகாவலர் கும்பலால் பீகாரில் வாலிபர் அடித்து கொலை? வைரல் வீடியோ மீது சந்தேகம்

பாட்னா: பீகாரில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் கும்பலால் இஸ்லாமிய வாலிபர் அடித்து உதைக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், சமஸ்திப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது கலீல் அலாம். இவர் ஜனதா தள கட்சியை சேர்ந்தவர். இவரை காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி புர்ரி ஆற்றங்கரை அருகே இவர் சடலமாக மீட்கப்பட்டார். பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களால் இவர் அடித்து கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், போலீசார் இதனை மறுத்துள்ளனர். கடந்த 16ம் தேதி கலீலை காணவில்லை என குடும்பத்தினர் புகார் கொடுத்தனர்.அடுத்தடுத்த நாட்களில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருப்பதாகவும், அவரது கிட்னியை விற்று விடுவோம் என்றும் செல்போனில் மிரட்டல் அழைப்புக்கள் வந்துள்ளது. இந்நிலையில், 19ம் தேதி கலீம் சடலமாக மீட்கப்பட்டார் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால், கலீலை ஒரு கும்பல் சூழ்ந்து அடித்து உதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் அவர் கையெடுத்து கும்பிட்டு தன்னை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சுகிறார். ேமலும், மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து அவர்கள் கலீலை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். ஆனால், அவர்களின் முகங்கள் வீடியோவில் தெரியவில்லை. இந்த வீடியோவின் உண்மைதன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இது போலியாக இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்….

The post பசு பாதுகாவலர் கும்பலால் பீகாரில் வாலிபர் அடித்து கொலை? வைரல் வீடியோ மீது சந்தேகம் appeared first on Dinakaran.

Tags : Waliber ,Bihar ,Patna ,Dinakaran ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!