×

விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்: ஆயிரம் பேர் பங்கேற்பு

சோமனூர்: கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கம் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் விசைத்தறியாளர்களுக்கும் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், தொடர்ந்து 45 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காரணம்பேட்டை நால் ரோட்டில் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க தலைவர் பழனிச்சாமி  தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். 2வது நாளாக நேற்றும் தொடர்ந்த உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அரசு அறிவித்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்துவதில் பிடிவாதம் பிடிக்காமல் ஒப்பந்த வடிவில் கையெப்பமிட்டு கூலி உயர்வை அமல்படுத்தி லட்சக்கணக்காண விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமென்றும், விசைத்தறியாளர்களின் தொழில் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்து கூலி உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விசைத்தறியாளர்களின் பிரச்னையை முழுமையாக முடிக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடுவது இல்லை என்று கோஷங்கள் எழுப்பினர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்….

The post விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்: ஆயிரம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : of keys ,Somanur ,Govai-Tiruppur District Wage-Weaving Society ,Dinakaran ,
× RELATED புதிய தொழிற்பேட்டையால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு