×

அதிமுக, தமாகா கூட்டணி தோல்வி தற்காலிகமானது: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு சரியான காரணங்களும் உண்டு தவறான காரணங்களும் உண்டு, அதாவது கூட்டணி கட்சிகளுக்குள் ஒதுக்கிய இடங்களின் பங்கீடு மேலும் ஆட்சி பலம் ஆகியவற்றால் பெற்ற பெருவாரியான வெற்றி தமாகாவுக்கு குறைவான எண்ணிக்கையில் கூட்டணியில் வாய்ப்பு கிடைத்தாலும், கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, தமாகா கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, தமாகா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் தமாகா சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post அதிமுக, தமாகா கூட்டணி தோல்வி தற்காலிகமானது: ஜி.கே.வாசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamaga ,G. K.K. ,Wasson ,Chennai ,Vasan ,Dhugu ,Tamaga Alliance ,G. K.K. Vasan ,Dinakaran ,
× RELATED அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல...