×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விசாரணை கமிஷனின் பதவி காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விசாரணை கமிஷனின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, 100வது நாளான 2018ம் ஆண்டு மே 22ம் தேதியன்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது திடீரென்று கலவரம் ஏற்பட்டு, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், முந்தைய அ.தி.மு.க. அரசு விசாரணை கமிஷனை அமைத்து உத்தரவிட்டது.முன்னதாக கடந்த 7ம் தேதி அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் கடிதம் எழுதினார். அதில், இந்த சம்பவம் தொடர்பாக 1,200 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அது தொடர்பாக பல ஆவணங்களும் சேர்க்கப்பட்டன. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, அறிக்கையை தயார் செய்து, 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியாது. எனவே மேலும் 3 மாதங்களுக்கு விசாரணை கமிஷனின் பதவி காலத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, விசாரணை கமிஷனின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. விசாரண அறிக்கையை வரும் மே மாதம் 22ம் தேதிக்குள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அளிக்க வேண்டும்….

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விசாரணை கமிஷனின் பதவி காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tuticorin Sterlite Plant Inquiry Commission ,Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...