×

ஒரு லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உதவிய அரசு: சூர்யா மகிழ்ச்சி

சென்னை: சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை சூர்யாவின் அகரம் பவுண்டேஷன், கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் இணைந்து நடத்தின. 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது. அப்போது சூர்யா பேசியதாவது: எங்களுக்கு அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவுகின்றன. பள்ளியை இடைநிறுத்தும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது அசாதாரண காரியம். அதை அரசுடன் இணைந்து செய்து வருகிறோம். கல்வி மூலமே அனைத்தும் சாத்தியமாகும். சாதி, மதம் தாண்டி எப்படி வாழ்வது? வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை. தொழில்நுட்பத்துக்கும், வாழ்க்கைக்குமான இடைவெளியை எப்படி புரிந்து கொள்வது என்பதை கல்வி தருகிறது.
ஒருநாளில் 86 ஆயிரத்து 400 விநாடிகள் இருக்கிறது.

அதில் ஒரு 10 விநாடியை யாரோ களவாடி விட்டனர், தவறாகப் பேசி அவ மதித்து விட்டனர் என்பதற்காக, மீதியுள்ள 86 ஆயிரத்து 390 விநாடிகளை நாம் ஏன் வீணாக்க வேண்டும்? மற்றவர்களுக்கு உதவுவது சாதாரணமானது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் நிற்பதுதான் சிறந்தது. எங்கள் பணிக்கு உதவும் அரசுக்கும், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி. கடந்த 3 ஆண்டுகளில் அரசுடன் இணைந்து ஒரு லட்சத்துக்கு மேலான மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்திருக்கிறோம். 14 வருடங்களில் 5,200 மாணவர்கள் அகரம் ஆதரவில் படித்து நல்ல நிலையில் இருக்கின்றனர். இந்தப்பணிகளை அரசுடன் இணைந்து செய்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்.

 

The post ஒரு லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உதவிய அரசு: சூர்யா மகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Surya ,Chennai ,Annual Educational Scholarship ,Sivamar Education Foundation ,Akaram Foundation ,Karthi ,Tilavan Foundation ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்