×

ஊத்துக்கோட்டையில் திமுக இமாலய வெற்றி: போட்டியிட்ட 14 வார்டிலும் பாஜ டெபாசிட் இழந்தது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக 13 இடங்களை பிடித்து இமாலய வெற்றி பெற்றது. பின்னர், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பாஜ போட்டியிட்ட 9 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும் டெபாசிட்டை இழந்தன. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில், 12வது வார்டில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மீதமுள்ள 14 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: 1வது வார்டு(திமுக வெற்றி): சமீமா ரகீம் (திமுக) – 646, ரகமத் பீ (அதிமுக) – 139. 2வது வார்டு(திமுக வெற்றி): இந்துமதி (திமுக) – 202, மோகனா (அதிமுக) – 65. 3வது வார்டு(திமுக வெற்றி): அப்துல் ரஷீத் (திமுக) –  180, அதிமுக ஷேக்தாவுத் (அதிமுக) – 147.4வது வார்டு(திமுக வெற்றி): அபிராமி (திமுக) – 234, கோமளா (அதிமுக) – 211.   5வது வார்டு(திமுக வெற்றி): கோகுலகிருஷ்ணன்  (திமுக) – 321, புவனா (அதிமுக) –  200. 6வது வார்டு(அதிமுக வெற்றி): ஆனந்தி (அதிமுக) – 443, செந்தாமரை (திமுக) – 282. 7வது வார்டு(திமுக வெற்றி): குமரவேலு (திமுக)  – 392, ராசமாணிக்கம் (அதிமுக) – 157. 8வது வார்டு(திமுக வெற்றி): திரிபுரசுந்தரி (திமுக)  – 293, வள்ளி (அதிமுக) – 155.  9வது  வார்டு(திமுக வெற்றி): ஜீவா (திமுக)  – 244, திருநாவுக்கரசு (அதிமுக) – 88.10வது வார்டு(திமுக வெற்றி): ஆப்தாப்பேகம் (திமுக) – 154 (குலுக்கல் முறை வெற்றி), சாந்தி (சுயே.) – 154. 11வது வார்டு(திமுக வெற்றி): மணிகண்டன் (எ) கோல்டுமணி (திமுக) – 281, பிரஸ்  பி.இ.மணி (அதிமுக) – 109.13வது வார்டு(திமுக வெற்றி): கல்பனா பார்த்திபன் (திமுக)  – 366, அலமேலு (சுயே.) – 263.14வது வார்டு(திமுக வெற்றி): சுமலதா நரேஷ் (திமுக) –  313, புஷ்பா (அதிமுக) – 67.15வது வார்டு(அதிமுக வெற்றி): அருணாசலம் (அதிமுக)  – 281, காஞ்சனா (திமுக) – 234. என ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக 13 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. முன்னதாக தபால் வாக்குகள் 25ல் திமுக 15 வாக்குகளையும்,  அதிமுக 7 வாக்குகளையும், சுயேச்சை 2, பாஜ 1 வாக்கையும் பெற்றிருந்தன. மேலும், வெற்றி பெற்ற பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏவிடமும், முன்னாள் எம்எல்ஏ இஏபி.சிவாஜியிடம் வாழ்த்து பெற்றனர். * டெபாசிட் இழந்த கட்சிகள்அதிமுக 3 வார்டுகளிலும்,  பாஜ போட்டியிட்ட 9 வார்டுகளிலும் டெபாசிட் இழந்தது.  மேலும்  காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் எம்எல் போன்ற கட்சிகளும், ஒரு சிலரை தவிர மற்றவர்களில் சுயேச்சைகள் டெபாசிட் இழந்தன.  …

The post ஊத்துக்கோட்டையில் திமுக இமாலய வெற்றி: போட்டியிட்ட 14 வார்டிலும் பாஜ டெபாசிட் இழந்தது appeared first on Dinakaran.

Tags : DMK Himalaya ,Oothukottai ,BJP ,DMK ,Anna ,Dinakaran ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது