×

எழுத்தாளர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட்டில் ஸ்டிரைக்

நியூயார்க்: ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் உள்ளிட்ட கதாசிரியர்கள் அடங்கிய சங்கம் கடந்த சில நாட்களாக சம்பளப் பற்றாக்குறை காரணமாக வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இதை தொடர்ந்து கதை சம்பந்தப்பட்ட வேலைகளில் அவர்கள் ஈடுபடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்போது எஸ்ஏஜி (Screen Actors Guild American Federation of Television and Radio Artists) என்ற அமைப்பும் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்திருக்கிறது. இந்த அமைப்பில் நடிகர்-நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.

இந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சங்கத்தில் இருக்கும் யாரும் திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகள் என்று எதிலும் பங்கேற்காமல் இருக்கின்றனர். மேலும், முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட யாரும் புதுப்படம் ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால், கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா வட்டாரமும் ஸ்தம்பித்து காணப்படுகிறது. படப்பிடிப்புகளை தவிர சினிமா நடிகர், நடிகைகள் யாரும் டப்பிங், நடனம், இசை போன்ற எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், சமீபத்தில் லண்டனில் நடந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன் ஹைமர்’ திரைப்பட புரமோஷனுக்கு வந்த நடிகர்-நடிகைகள், அந்த விழாவில் இருந்து கூட்டாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

The post எழுத்தாளர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட்டில் ஸ்டிரைக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,New York ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எனக்கு 70 வயது ஆகிவிட்டதா? ஜாக்கி சான் அதிர்ச்சி