×

பிரணவ்வுடன் மீண்டும் இணையும் கல்யாணி

சென்னை: மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஹிருதயம்’ பட கூட்டணி மீண்டும் புதிய படத்துக்காக இணைந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்த படத்தை வினீத் னிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை குவித்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

வினீத் னிவாசன், அவரது தம்பி தியான் னிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த
படம் மோகன்லால் மற்றும் வினீத்தின் தந்தை னிவாசன் இடையேயான நட்பை மையமாக வைத்து உருவாகும் என்று கூறப்படுகிறது. மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரணவ்வும், அவரது தந்தை னிவாசன் கதாபாத்திரத்தில் தியானும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

The post பிரணவ்வுடன் மீண்டும் இணையும் கல்யாணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kalyani ,Pranav ,CHENNAI ,Mohanlal ,Kalyani Priyadarshan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...