×

பாலிவுட் ஸ்டார்களின் பாதுகாவலர்களுக்கு எவ்வளவு சம்பளம்?

மும்பை: ஆமிர்கானின் பாதுகாவலர் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளமாக பெறுகிறார். அக்‌ஷய் குமாரிடம் ஷ்ரேசே தேலே என்பவர் பாதுகாவலராக பணியாற்றுகிறார். இவர் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் பெறுகிறார்.
அமிதாப் பச்சனிடம் பாதுகாப்பு பணிக்கு ஜிதேந்திர ஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளம். தீபிகா படுகோனிடம் பல ஆண்டுகளாக உதவியாளராகவும் பாதுகாவலராகவும் இருப்பவர் ஜலால். இவருக்கு ஆண்டுக்கு 80 லட்சம் சம்பளம். சல்மான் கானிடம் முதல் படத்திலிருந்து பாதுகாவலராக இருப்பவர் ஷேரா.

இவருக்கு ஆண்டுக்கு 2 கோடி சம்பளம். இவர் பாதுகாவலர் என்பதை தாண்டி, சல்மான் கானின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார். ஷாருக்கானின் மெய்க்காப்பாளர் ரவி சிங். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 2.5 கோடி. நடிகை அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலர் ஜெய்சிங், மாதம்தோறும் 9 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார். அஜய் தேவ்கனின் பாடிகார்ட் மாதம் தோறும் ரூ.13 லட்சம் சம்பள பணமாக வாங்குகிறார்.

The post பாலிவுட் ஸ்டார்களின் பாதுகாவலர்களுக்கு எவ்வளவு சம்பளம்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mumbai ,Amirkan ,Shrese Dale ,Akshay Kumar ,Jitendra Shinde ,Amitabh Bachchan ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை, மும்பையில் ₹45 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி