×

மகளுடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்த நடிகை சாயிஷா

ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா போன்ற படங்களில் நடித்தவர், கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் நடித்த போது அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகும் காப்பான் படத்தில் நடித்த சாயிஷா சமீபத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்து வெளியான பத்து தல படத்தில் ராவடி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

மேலும், ஆர்யா- சாயிஷா தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளுடன் எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் சாயிஷா. இந்நிலையில் தற்போது தனது மகளுடன் தான் நடனமாடும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வைரலானது.

The post மகளுடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்த நடிகை சாயிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Saisha ,Jayam Ravi ,AL Vijay ,Arya ,Ghajinikant ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!