×

அலங்கார ஊர்தி குறித்து முதல்வர் எடுத்த நிலைக்கு மிகப்பெரிய ஆதரவு: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: அலங்கார ஊர்தி குறித்து முதல்வர் எடுத்த நிலைக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவின்படி தில்லி அணிவகுப்பில் மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற, குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அணிவகுத்தது, அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்த அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக அனுப்பப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.தற்போது அந்த அலங்கார ஊர்திகள் சென்னை கடற்கரை காமராஜர் சாலையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அமைச்சர்கள் பொதுமக்கள் பார்வைக்குத் தொடங்கி வைத்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த அலங்கார ஊர்திகளை சென்னை மாநகர மக்கள் வருகிற 23ம் தேதி வரை பெருந்திரளாக வருகை புரிந்து பார்வையிட்டு மகிழ வேண்டும். இதன்மூலம் ஒன்றிய அரசால் மறுக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு சென்னை மாநகர மக்களிடையே அமோக வரவேற்பும் ஆதரவும் பெற்றது என்ற செய்தி நாடு முழுவதும் பரவட்டும். அதன்மூலம் தமிழக முதல்வர் எடுத்த நிலைக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அலங்கார ஊர்தி குறித்து முதல்வர் எடுத்த நிலைக்கு மிகப்பெரிய ஆதரவு: கே.எஸ்.அழகிரி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : K. S.S. Anekiri ,Chennai ,Tamil Nadu ,Ornamental Varthi ,K. S.S. ,Aunakiri ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...