×

ஆட்டோ திருடிச்சென்று சவாரி ஓட்டியவர் கைது

பெரம்பூர்: வேலை இல்லாததால் ஆட்டோ திருடிச்சென்று சவாரி ஓட்டிய பெயின்டரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி.என்.டி. சாலையை சேர்ந்தவர் ஆனந்த் (36). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், கடந்த 6ம் தேதி இரவு தனது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஆட்டோ மாயமானது தெரிந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆனந்த் நேற்று எழும்பூர் சென்றபோது, தனது ஆட்டோவை ஒருவர் ஓட்டிச் செல்வதை பார்த்தார். உடனடியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவை பிடித்து, அதை ஓட்டி வந்த நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்ட நபர் மாதவரம் தபால் பெட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) என்பதும், பெயின்டரான இவர், வேலை இல்லாத காரணத்தினால் ஆட்டோவை திருடிச் சென்று, சவாரி ஓட்டி வந்ததும் தெரிந்தது. இதனையடுத்து கார்த்திக் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்….

The post ஆட்டோ திருடிச்சென்று சவாரி ஓட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Kodungayur Erringeri G. ,N.N. TD ,Dinakaran ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...