சென்னை: இந்திய அளவில் பல்வேறு அழகுப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்றவர், மீனாட்சி சவுத்ரி. பிறகு மாடலிங்கில் ஈடுபட்டார். தெலுங்கு படங்களில் நடித்தார். இப்போது தமிழில் அவர் அறிமுகமாகும் படம், ‘கொலை’. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிக்கும் இப்படத்தை ‘விடியும் முன்’ பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். வரும் 21ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தற்போது தமிழில் பேச தீவிர பயிற்சி பெற்று வரும் மீனாட்சி சவுத்ரி கூறியதாவது: சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி, சரோஜாதேவி நடித்த ‘புதிய பறவை’யில், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடியுள்ள ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடல் காட்சியைப் பார்த்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். தற்போது அந்தப்பாடலின் ரீமிக்ஸில், ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு ஏற்ப நான் நடித்துள்ளேன். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.
தவிர, ‘குண்டூர் காரம்’ என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கிறேன். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார். திடீரென்று அவர் விலகியதால் என்னை ஒப்பந்தம் செய்தனர். நான் பல் மருத்துவம் படித்தேன். ஆனால், எந்த மருத்துமனையிலும் பணியாற்றவில்லை. மாடலிங், சினிமா என்று பிசியாகி விட்டேன். நயன்தாரா, திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவர்களைப் போல் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன்.
The post பல் டாக்டர் ஹீரோயின் ஆனார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.