×

திருவள்ளூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது: மற்றொருவருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தில் நேற்று சந்தேகத்தின்பேரில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றனர். இதை பொதுமக்கள் பார்த்து அவர்களை பிடிக்க முயன்றனர். இதை பார்த்த இரண்டு பேரும் தப்பி ஓட முயன்றனர். அதில் பொதுமக்கள் ஒருவரை மட்டும் பிடித்து செவ்வாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த வெற்றி(19) என்பதும், வெள்ளவேடு காவல் எல்லைக்குட்பட்ட புதுச்சத்திரம் கிராமத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வாலிபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து மோட்டார் சைக்கிளை இருவரும் திருடிக்கொண்டு வந்தது தெரியவந்தது.தொடர்ந்து அவரை வெள்ளவேடு போலீசில் ஒப்படைத்தனர். வெள்ளவேடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்(22) என்பவரது மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வெற்றி மீது வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்….

The post திருவள்ளூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது: மற்றொருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,Tiruvur ,
× RELATED லாரியை மேடையாக்கி தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்