×

சின்னச்சுருளி அருவியில் ஜில் தண்ணீர் கொட்டுது-சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

வருசநாடு : சின்னச்சுருளி அருவியில் தண்ணீர் ஜோராக விழுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.தேனி மாவட்டம், கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் மேகமலை சின்னச்சுருளி அருவி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது மலைப்பகுதியில் பெய்யும் மழையால் அருவியில் தண்ணீர் சீராகக் கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு வருகின்றனர். மலையில் இருந்து விழும் குளிர்ந்த நீரில் ஆசை தீர குளித்துவிட்டு செல்கின்றனர்.கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா கூறுகையில், ‘‘சின்னச்சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை சார்பில் ஒரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு ஒருவருக்கு ரூ.30 வீதம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. கும்பக்கரை, சுருளி அருவிகளை தொடர்ந்து இங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு தற்போது வந்து செல்கின்றனர். அரசு கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும்’’ என்றார்….

The post சின்னச்சுருளி அருவியில் ஜில் தண்ணீர் கொட்டுது-சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Chinnachukuli ,Chinnachukulli ,Honey District ,Kompituzulu Mountain ,
× RELATED மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை சாலையை சீரமைக்க கோரிக்கை