×

லிங்கம் கோயில் ஓடைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் தடுமாறும் வாகனங்கள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை விலக்கிற்கு செல்லும் வழியில் லிங்கம் கோயில் ஓடை உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் பெய்யும் மழையால் இந்த ஓடை வழியே அளவுக்கு அதிகமான தண்ணீர் தரைப்பாலத்தின் வழியே சென்றதால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் மாற்றுவழியான மகாராஜபுரம் வழியாக வாகனங்கள் சுற்றிச்செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.சதுரகிாி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்திற்கு 8 நாட்கள் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மழை பெய்யாத காலங்களில் இந்த தரைப்பாலத்தின் வழியே சென்று வந்தன. தாணிப்பாறை அடிவாரம் வரை உள்ள தோட்டங்களுக்கு இந்த பாலம் வழியே ஏராளமான விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளிகள் டூவீலர் மூலமாக சென்று வருகிறன்றனர்.விவசாயிகளின் தொடர் கோரிக்கைகள் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில்புதிய பாலம் கட்டுவதற்கு ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. தரைப்பாலத்தை உடைத்து வேலை தொடங்கப்பட்டது. பின்னர் வேலை சாிவர நடைபெறாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்ேபற்றதும் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், பாலத்தை ஒட்டி செல்லக்கூடிய இரண்டு பக்கமும் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் விலகிச் செல்லும்போது தடுமாறி பள்ளத்தில் விழக்கூடிய நிலை உள்ளது. எனவே, உடனடியாக பாலத்தின் இரண்டு பக்கமும் தடுப்புச்சுவர் கட்டி பாலத்தின் அளவுபடி பாதையை தரை வரை கொண்டு செல்வதோடு அதில் தார்ச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பிப்.28ம் தேதி பிரதோஷம், மார்ச் 1 ம் தேதி மகாசிவராத்திாி நடைபெறுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வருவார்கள். 2ம் தேதி மாசி அமாவாசை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே,பாலத்தில் தடுப்புச்சுவர் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post லிங்கம் கோயில் ஓடைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் தடுமாறும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Lingam Temple ,Vadrayirupi ,Saduragiri ,Sunderamakalingam Temple ,Lingam ,Dinakaran ,
× RELATED சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு...