×

தமிழ்நாட்டில் ராஜமவுலி ஆன்மிக சுற்றுப்பயணம்

சென்னை: இயக்குனர் ராஜமவுலி தமிழ்நாட்டில் உள்ள பிரசித்த பெற்ற கோயில்களை சுற்றிப் பார்த்த வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் நீண்ட நாட்களாக சாலைப் பயணம் செய்ய விரும்பினேன். கோயில்களுக்குச் செல்ல விரும்பிய என் மகளுக்கு நன்றி. நாங்கள் அதில் முழுமையாக இறங்கினோம். ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். கொடுக்கப்பட்ட சில நாட்களில் பனிப்பாறையின் நுனியை மட்டுமே தொட முடியும்.

நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல், பாண்டியர்கள், சோழர்கள் நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது. மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தில் உள்ள காகா ஓட்டல் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது. ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடை போட்டிருக்க வேண்டும். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாய் மண்ணின் சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது’ என்று ராஜமவுலி பதிவிட்டுள்ளார்.

ராஜமவுலியின் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ‘ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர், ஹாலிவுட் ஜாம்பவான்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரிடம் நேரடியாக பாராட்டுகளை பெற்றவர் மதுரையில் ஒரு சாலையோர கடையில் ஜிகர்தண்டா குடித்தும், முருகன் மெஸ்ஸை பாராட்டியும் நடந்துகொள்ள எளிமை மனம் வேண்டும். அது ராஜமவுலியிடம் இருக்கிறது’ என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

The post தமிழ்நாட்டில் ராஜமவுலி ஆன்மிக சுற்றுப்பயணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajamouli Spiritual Tour ,Tamil Nadu ,Chennai ,Rajamouli ,Rajamauli Spiritual Tour in Tamil ,Nadu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...