×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சியில் திமுக பிரம்மாண்ட வெற்றி..!!

தஞ்சாவூர்: தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சியை திமுக தன்வசப்படுத்தியது. தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் 34ல் திமுக வெற்றி பெற்றது. அதிமுக 6 வார்டுகளில் வெற்றியை பெற்றிருக்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சி 11 வார்டில் திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார். வார்டு 12 -ல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. தஞ்சாவூர் மாநகராட்சி 10-வது வார்டு திமுக வேட்பாளர் புண்ணியமூர்த்தி வெற்றி பெற்றார். இதேபோல் கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 42 இடங்களில் திமுக அபார வெற்றி பெற்றது. கும்பகோணம் மாநகராட்சியில் அதிமுக 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். கும்பகோணம் மாநகராட்சியில் 87 சதவீத இடங்களை கைப்பற்றி திமுக மேயர் பதவியை பிடிக்கிறது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கும்பகோணம் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி  வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் திமுக கட்சி தன்வசப்படுத்தியது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக் கோட்டை, அதிராம் பட்டினம் என 2 நகராட்சிகள், வல்லம், மதுக்கூர், திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, சுவாமிமலை பெருமகளூர் உள்ளிட்ட 20 பேரூராட்சிகள் இருக்கிறது. தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் 2 மாநகராட்சியை பெற்றுள்ள சிறப்பை தஞ்சை மாவட்டம் பிடித்துள்ளது. அதாவது மற்ற மாவட்டங்களில் ஒரே மாநகராட்சி மட்டும் உள்ளது. சில மாவட்டங்களில் நகராட்சி மட்டுமே உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சி உள்ளதால் 2 மேயர் பதவியையும் திமுகவே கைப்பற்றியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சியில் திமுக பிரம்மாண்ட வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Urban Local Party Election 2022 ,Thanjavur ,Kumbakonam Constituency ,Dishagagamandha ,Kumbakonam Corporation ,Tamil Nadu ,Thanjavur Corporation ,Urban Local Lodi Election 2022 ,Kumbakonam Municipality ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...