×

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 14 பேர் பலி: உத்தரகாண்டில் சோகம்

டேராடூன்: உத்தரகாண்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த விபத்தில் 14 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டம் சுகிதாங் – டண்டமினார் சாலையில் நேற்றிரவு 10 மணியளவில் தனக்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 15க்கும் மேற்பட்டோர் மினி வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக  தண்டா கக்னாய் என்ற இடத்திற்கு வாகனம் சென்ற போது ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இரவு நேரம் என்பதால் விபத்து நடந்த விபரம் யாருக்கும் தெரியவில்லை. இன்று அதிகாலை 3 மணியளவில்தான் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது, அதன்பின்னர் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அவர்கள் பள்ளத்தாக்கில் கிடந்த 11 உடல்களை மீட்டனர். மீதமுள்ள 4 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். விபத்தில் சிக்கிய 14 பேரும் பலியாகி இருக்க வாய்ப்புள்ளதாக சம்பாவத் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர பிஞ்சா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த பிரகாஷ் ராம் மற்றும் அவரது உதவியாளர் திரிலோக் ராம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து ஏறிவந்து கிராம மக்களிடம் விபத்து குறித்து தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார். …

The post திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 14 பேர் பலி: உத்தரகாண்டில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Uttarkhand ,Dehradun ,Uttarakhand ,
× RELATED கேதார்நாத்தில் நிலை தடுமாறிய ஹெலிகாப்டரால் பரபரப்பு