×

பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் 1.24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

சென்னை: பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 453 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரை தூய்மையாக்கவும், அழகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகரில் உள்ள சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருவதோடு, பூங்காக்கள், ஏரிகள் புணரமைக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 18ம் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 24 ஆயிரத்து 453  மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 18ம் தேதி மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் 30, மத்திய சென்னையில் 50 மரக்கன்றுகள் என 80 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதன் மூலம், காற்று மாசு, ஒலி மாசு குறைவதோடு, இரண்டரை மடங்கு கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் 1.24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Green Corporation Scheme ,Chennai ,Chennai Corporation ,Green Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...