×

நிருபர் தற்கொலை

ஆலந்தூர்: கீழ்கட்டளை, சக்தி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் தொலைக்காட்சிகளில் நிருபராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது  அவருக்கு சரியான வேலையில்லாததால்  வறுமையில் இருந்துள்ளார். அவரது மனைவி பிரசவத்திற்காக மயிலாடுதுறையில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தை பிறந்துள்ளது, குழந்தையை  சென்று பார்க்க சதீஷிடம் பணம் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று அவரது மனைவி  சதீஷ்குமாரை  செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் மடிப்பாக்கத்தில் உள்ள உறவினரை தொடர்பு கொண்டு  பார்க்கும்படி அனுப்பி உள்ளார்.  அவர் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது சதீஷ்குமார்,  தூக்கில் தொங்கிகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்….

The post நிருபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sadeeshkumar ,Shakti City ,Alandur: Sadishkumar ,
× RELATED சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி கைது