×

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 26 அணைகளின் கொள்ளளவு மீட்கப்படும்: நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மேட்டூர், வைகை, முல்லை பெரியாறு, சோலையாறு, கிருஷ்ணகிரி, சாத்தனூர், பாபநாசம், மணிமுத்தாறு உட்பட 90 அணைகள் உள்ளது. இவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், அணைகளில் படிந்துள்ள வண்டல் மண் படிமங்களால், அதன் கொள்ளளவு 30 – 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், மழைநீரை முழுமையாக சேமிக்க முடியவில்லை. இந்நிலையில் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண் அளவுகளை ஆய்வு ெசய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 55 அணைகளுக்கு ரூ.3.08 ேகாடி செலவில் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண் படிமங்கள் குறித்து தனியார் நிறுவனம் சர்பில் ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதில், மேட்டூர் அணை, மேல் ஆழியாறு, கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), சித்தமல்லி அணை (அரியலூர்), உப்பாறு அணை (திருச்சி), பொன்னியாறு அணை (திருச்சி), மோர்தானா அணை (வேலூர்), மருதாநிதி (திண்டுக்கல்), அவலாஞ்சி அணை (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), முக்கூர்த்தி அணை (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) உட்பட 55 அணைகளில் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டன. இந்த அணைகளில் 30 சதவீதம் வரை மண்படிமங்களால் நிறைந்து, அணைகளின் கொள்ளளவு குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அணைகளில் தூர்வாரி அதன் கொள்ளளவை மீட்க கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த காலங்களில் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், நீராதாரங்களை பெருக்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், தற்போது, மேலும், 9 அணைகளில் மண்படிமங்கள் தொடர்பாக ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்ட பணிகளுக்கு உலக வங்கி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மீதமுள்ள 26 அணைகளில் மண்படிமங்கள் தொடர்பாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்காக, இந்த திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 26 அணைகளின் கொள்ளளவு மீட்கப்படும்: நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Water Resources Department ,Chennai ,Mettur ,Vaigai ,Mullai Periyar ,Cholaiyar ,Krishnagiri ,Chatanur ,Papanasam ,Manimuthar ,Tamil Nadu Water Resources Department ,Dinakaran ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...