×

காணாமல் போன ஏட்டு விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் எழாய் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (42). இவர் மயிலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்தார். கடந்த 18ம் தேதி மாலை வேல்முருகன் பைக்கில் விக்கிரவாண்டி சென்று வருவதாக மனைவி தமிழரசியிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.புகாரின்படி, விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகனை தேடி வந்தனர். இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருந்து கூத்தம்பூண்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் ரைஸ்மில் அருகே வேல்முருகன் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என விசாரித்து வருகின்றனர்….

The post காணாமல் போன ஏட்டு விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Velmurugan ,Egrai ,Villupuram district ,Mylam police station ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...