×

சீர்காழி அருகே இறால் தீவன ஆலையில் பாய்லர் வெடித்ததில் 2 தொழிலாளிகள் பலி: 3 பேர் படுகாயம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் பயங்கர சத்தத்துடன் மூன்றரை டன் எடை கொண்ட பாய்லர் வெடித்து சிதறியது. அப்போது பணியில் இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்ஓரான் (15), பல்ஜித்ஓரான் (24) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பணியில் இருந்த 3 பேu;  படுகாயமடைந்தனர். அவர்ளை சக ஊழியர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். …

The post சீர்காழி அருகே இறால் தீவன ஆலையில் பாய்லர் வெடித்ததில் 2 தொழிலாளிகள் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Ali Hussain ,Totuwai ,Sirkazhi, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் பரபரப்பு கோழியை வேட்டையாடிய நல்ல பாம்பு பிடிபட்டது