×

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: தேரோட்டம் 26ம் தேதி நடக்கிறது

ெசன்னை: பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிரம்மோற்சவ விழா 20ம் தேதி தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் முதல்நாளான நேற்று காலை 8.15 மணி முதல் காலை 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நேற்று இரவு 7.45 மணியளவில் புன்னை மர வாகனத்தில் வீதியுலா நடந்தது. அப்போது, வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி தினமும் சுவாமி திருவீதியுலா நடக்கிறது.7ம் நாளில் முக்கிய திருவிழாவான தேரோட்டம்  26ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.கடைசி நாளான மார்ச் 1ம் தேதி அவரோ ஹனம், பகல் 12.30 மணியளவில் துவாதச ஆராதனம், இரவு 10 மணியளவில் சப்தாவர்ணம்- சிறிய திருத்தேர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கொடி இறக்கப்படும் நிகழ்வு நடைபெறுகிறது…

The post 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: தேரோட்டம் 26ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni Parthasarathy Temple ,Brahmotsavam ,Chariot ,JESSANAI ,Brahmotsava festival ,Parthasarathy Temple ,Vaishnava ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...