×

இன்சிடியஸ்: தி ரெட் டோர் – திரைவிமர்சனம்

பாட்ரிக் வில்சன் இயக்கத்தில் ஸ்காட் டீம்ஸ் திரைக்கதையில் வெளியாகியுள்ள ‘இன்சீடியஸ் –- தி ரெட் டோர்’. இன்சிடியஸ் ஹாரர் பட பாகங்களின் ஐந்தாவதும் கடைசியுமான இப்படம், இரண்டாவது பாகமான ‘இன்ஸிடியஸ்: சாப்டர் 2’ படத்தின் தொடர்ச்சியாகத் தொடங்குகிறது. 2010ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. 2வது பாகம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது வெளிவந்திருப்பது இதன் 5வது பாகம், இறுதி பாகமும்கூட இந்த படத்தின் கதை ரொம்ப சிம்பிள்.

நேரடியாக முதல் இரண்டு பாகங்களின் அடுத்த பாகமாக கடைசியாக வெளியான சாப்டர் 3, 4 இரண்டுக்கும் முந்தைய பாகமாக இந்த புதிய பாகம் வெளியாகியுள்ளது. வேறு உலகத்தில் வாழும் பேய்கள் பூமியில் வாழும் மனிதர்களின் உடல்களை இங்கேயே அழித்துவிட்டு ஆன்மாவை மட்டும் தங்கள் இடங்களுக்கு கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சிக்கிறது. இந்த உலகத்ேதாடு தொடர்பு கொள்ள அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு சிவப்பு கதவுதான்.

முந்தைய பாகத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த பேயிடமிருந்து பேரனை காப்பாற்றுகிறார் பாட்டி. இந்த பாகத்தில் அவர் இறந்து விடுகிறார். ஆனாலும் இந்த முறை பேய்கள் அந்த சிகப்பு கதவை திறக்க போராடுகிறது. நாயகன் டால்டன் லேபர்டை (டை சிம்ப்கின்ஸ்) ஒரு ஓவியன் என்பதால் அவனை சிவப்பு டோர் வரைய வைத்து அதன் மூலம் நுழைய முயற்சிக்கிறது. மகனை காப்பாற்ற கடந்த காலத்திற்குள் சென்று முயற்சிக்கிறார் தந்தை ஜோஷ் லேம்பர்ட் (பேட்ரிக் வில்சன்). என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

பேய்களை ஒரேடியாக அமைதியுறச் செய்ய, ஜோஷ் லேம்பர்ட்டும், டால்டன் லேம்பர்ட்டும், எப்பொழுதும் இல்லாத வகையில் இன்னும் கூடுதல் ஆழத்திற்குச் சென்று, அவர்கள் குடும்பத்தின் இருண்ட கடந்த காலத்தை எதிர்கொள்வதோடு, சிவப்புக் கதவின் பின்புறம் பதுங்கியுள்ள பேயையும் விரட்டி அடித்து, இந்த பாகத்தோடு இந்த பேய் கதைக்கு என்ட் கார்ட் போடுகிறார்கள். முந்தைய பாகங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த பேட்ரிக் வில்சன், இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

அவருடன், முதல் இரண்டு பாகங்களில் நடித்த சிம்ப்கின்ஸ், ரோஸ் பெயர்ன், ஆண்ட்ரீவ் அஸ்டர் நடித்துள்ளனர். சின்கிளியர் டேனியல், ஹியம் அப்பாஸ் புதிதாக இணைந்துள்ளனர். படத்திற்கு பலம் ஒலி மற்றும் ஒளிதான். விஷுவலாக நிறைய டார்க் தருணங்களில் திக் சூழல்களை உருவாக்கி மிரட்டியிருக்கிறார்கள். இன்சிடியஸ் ரசிகர்களுக்கு ஓரளவிற்கு படம் பிடிக்கும், புதிதாக பார்ப்பவர்களுக்கு சில குழப்பங்கள் உண்டாகும். நீண்ட இடைவேளைக்குப் பின் ஒரு ஹாலிவுட் ஹாரர் படம் பார்க்க நினைப்போர் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம்.

The post இன்சிடியஸ்: தி ரெட் டோர் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Scott Teams ,Patrick Wilson ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிறகன் விமர்சனம்