×

இலை கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் வேட்பாளருக்கு டாட்டா காட்டிய ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அதென்ன திருச்சி அல்வா கதை..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மலைக்கோட்டை மாநகரில் 64 வார்டுகளிலும் இலைக்கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். ஆனால் வசதியான, முக்கிய வேட்பாளர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு பணமில்லாமல் திண்டாடினர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க துண்டறிக்கைகள், பிரசார வாகனங்களுக்கான வாடகை, உடன் வருவோருக்கான டீ, காபி, டிபன், போக்குவரத்து செலவு, பூத் கமிட்டி செலவு என அனைத்துக்கும் பணமின்றி தவித்தனர். கடைசி நாள் வரை கட்சியிலிருந்து பணம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். பணம் கேட்ட வேட்பாளர்களிடம், சீக்கிரம் பணம் வரும். வேலையை பாருங்கள் என நம்பிக்கை தந்த மாவட்ட செயலாளர்களும் கடைசியில் கழட்டிவிட்டனர். கடைசி வரை கட்சியிலிருந்தும் பணம் வரவில்லை; முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களும் கண்டு கொள்ளவில்லையாம். இதனால் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம். 10 ஆண்டுகள் ஆளும்கட்சியாக இருந்தபோதும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் எங்களை கண்டு கொள்ளவில்லை. கட்சி ஆட்சியிலிருந்தபோது சம்பாதித்தவர்கள் பலரும் செலவு செய்வதற்கு அஞ்சி தேர்தலில் போட்டியிடாமல், ஒதுங்கிக்கொண்ட போதிலும், எங்களை போன்ற பலரும் கட்சியை நம்பி தேர்தலில் நின்றோம். ஆனால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தாங்க… எங்களுக்கு அல்வா தான் கொடுத்தாங்க… நெல்லை அல்வா சாப்பிட்டவங்க நாங்க… எங்களுக்கு திருச்சி அல்வா கொடுத்து சாப்பிடச் சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘தூங்கா நகரம் இலையை பொறுத்தவரை தூங்கும் நகரமாக மாறிவிட்டதாமே..’’ என விசாரித்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர மாநகராட்சி தேர்தலில் இலை கட்சி சார்பில் மாநகர் மாவட்டத்தில் இருந்து 100 வார்டுகளுக்கும் 100 வேட்பாளர்கள் போட்டியிட்டாங்க. அவர்களுக்கு சீட் கொடுக்கும்போதே, தேர்தலில் நன்றாக செலவு செய்யவேண்டும். கரன்சி இல்லை என்று கலாட்டா பண்ணக் கூடாது என்று முன் நிபந்தனை விதித்து சீட் கொடுத்தாங்களாம். இந்நிலையில், சீட் பெற விரும்பிய வேட்பாளர்கள் ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை தேர்தல் செலவு செய்வதாக கூறி சீட் வாங்கினார்களாம். செலவுக்கான பணத்தை மாவட்டச் செயலாளரான ‘மாஜி’ தெர்மகோலிடம் காட்டியப் பிறகே சீட் வழங்கப்பட்டதாம். ஆனால், பிரசாரத்துக்குச் செல்லும் போது மக்களிடையே காணப்பட்ட எதிர்ப்பைக் கண்ட பெரும்பாலான இலை வேட்பாளர்கள், ‘தேறுவது கஷ்டம்’ என்று தெரிந்து கொண்டதால், பெயரளவில் பிரசாரம் செய்து விட்டு, கரன்சியை பதுக்கிட்டாங்களாம். கரன்சி வராததை கண்ட கட்சி தொண்டர்கள் இலை அலுவலகத்துக்கு படையெடுத்திருக்கிறாங்க.அப்படியும் கரன்சி வராததால், கட்சி தொண்டர்கள் ‘டல்’ ஆயிட்டாங்க. வேட்பாளர்கள் பணம் தராததால், பல வாக்குச்சாவடிகளில் இலை கட்சி சார்பில் பூத்தில் முகவர்கள் பலல் ‘எஸ்’ ஆகிட்டாங்களாம். பலர் வேட்பாளருக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு போயிட்டாங்களாம்… ஆள் இல்லாத பரிதாப நிலையை இம்முறை பார்க்க முடிந்ததாம். கண்ணுல காட்டுன பணத்தை, களத்தில காட்டலையே… என மாஜி தெர்மகோல் மனம் உடைந்து போயிருக்கிறாராம். அதே சமயம் கரன்சி இல்லாததால், தொண்டர்கள் தேர்தல் வேலை செய்யாமல் தூங்க போயிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை தலைமை கைவிட்டதால் வேட்பாளர்கள் விரக்தியில் இருக்காங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாநகராட்சியில தேர்தல்ல அனல் பறக்கும் பிரசாரத்துக்காக தூக்கமின்றி தவிச்ச இலைக்கட்சி வேட்பாளருங்க, இப்பவும் தூக்கம் இல்லாமலேயே தவிச்சுட்டு இருக்காங்க. வேட்பாளருக்கு கரன்சி கொடுப்பதாக இலை கட்சியின் மாவட்ட தலைமை உறுதி கொடுத்தாங்களாம். அதை நம்பி, சிலர் பல வார்டுகள்ல வாக்காளர்களுக்கு புடவை, கரன்சியை இடத்துக்கு ஏத்தமாதிரி வாரி இறைச்சாங்களாம். சில இடங்களில் தாமரை கட்சி, சுயேச்சை வேட்பாளர்களுக்கு கரன்சி கொடுத்து முடக்கிட்டாங்களாம். இதுக்கே சில லகரம் செலவானதாம். இப்போதுதான் இலைக்கட்சி வேட்பாளருங்க இப்பவும் தூக்கமில்லாம இருக்காங்களாம். ஜெயிப்போமா… தலைமையில இருந்து கரன்சி வருமா என்ற ஏக்கத்தில் நைட்டுல தூக்கம் கூட வராம புலம்புறாங்க. நாளை வாக்கு எண்ணிக்கை முடிஞ்சதும் இலைக்கட்சி மாவட்ட செயலாளருங்கள சந்தித்து பணம் வாங்க அனைத்து வேட்பாளருங்களும் முடிவு செய்து இருக்காங்களாம். இது தெரிஞ்ச மாவட்ட செயலாளர்கள் சென்னையில தஞ்சம் புகுந்துள்ளதாக பேச்சு ஓடுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.   …

The post இலை கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் வேட்பாளருக்கு டாட்டா காட்டிய ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf Party ,Tata ,Trichy Alva ,Uncle Peter ,Malaikotta ,wiki ,
× RELATED நான் யாரிடமாவது ஆதாயம்...