×

நைல் நதியின் குறுக்கே மாபெரும் அணையில் மின்சார உற்பத்தி!: இருள் சூழ்ந்த எத்தியோப்பியாவிற்கு ஒளிபாய்ச்சும் என நம்பிக்கை..!!

எத்தியோப்பியா: ஆப்ரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையமாக நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவில் கட்டப்பட்டுள்ள மாபெரும் அணையில் மின்சார உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் பாயும் இந்த நதியில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது கிராண்ட் எத்தியோபியன் ரிலையன்ஸ் அணை. 1.8 கிலோ மீட்டர் அகலமும், 145 மீட்டர் உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அணையில் மின்சார உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 83.9 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் அபே அகமது காணொலி வழியாக மின்சார உற்பத்தியை தொடங்கி வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் அந்நாட்டின் மின்சார தேவையை விட இருமடங்கு கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் திறன் கொண்டுள்ளது. முதற்கட்டமாக 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருள் சூழ்ந்த எத்தியோப்பியாவிற்கு இந்த மின் உற்பத்தி ஒளி பாய்ச்சும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இப்போதும் எத்தியோப்பியாவில் 60 விழுக்காடு மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளிலேயே உள்ளனர். உபரி மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கும் வழங்கும் திறன் இருப்பதால் எத்தியோப்பியாவிற்கு மட்டுமல்ல ஆப்ரிக்க கண்டத்திற்கும், நைல் நதி பாயும் நாடுகளுக்கும் இது நற்செய்தி என்று பிரதமர் அபே அகமது கூறியுள்ளார். ஆனால் வேளாண் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு 97 விழுக்காடு நைல் நதியை சார்ந்துள்ள எகிப்து, இந்த ஆணையால் தங்கள் நாட்டிற்கான நீரின் பங்கு பெருமளவு குறையக்கூடுமோ என கவலை தெரிவித்துள்ளது. அதேபோல நைலை ஆதாரமாக கொண்ட சூடானும், ஆணையால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளது. வறுமையில் நுழைந்த எத்தியோப்பியாவின் பொருளாதார எலும்பை நிமித்தம் ஆதாரமாக இது இருக்கும் என்பதால் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது எத்தியோப்பியா. இத்தகைய மாபெரும் திட்டம் முழுக்க முழுக்க மக்கள் நிதியில் இருந்து நிறைவேற்றப்படுகிறது என்பது கூடுதல் வியப்பு. …

The post நைல் நதியின் குறுக்கே மாபெரும் அணையில் மின்சார உற்பத்தி!: இருள் சூழ்ந்த எத்தியோப்பியாவிற்கு ஒளிபாய்ச்சும் என நம்பிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Nile ,Ethiopia ,Africa ,Nile River ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்