×

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் சிம்பு

சென்னை: கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர், துல்கர் சல்மான், ரிது வர்மா நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் போர் வீரனாக சிம்பு நடிக்கிறார். அதே சமயத்தில் நிகழ்கால பகுதியும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தெரிகிறது.

இந்த படத்துக்கு பிறகு கார்த்திக் தங்கவேல் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் சிம்பு. ஜெயம் ரவி, ராசி கன்னா நடித்த அடங்க மறு படத்தை இயக்கியவர் கார்த்திக் தங்கவேல். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் 49வது படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என தெரிகிறது. இது ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தரும் வடசென்னை பகுதி கதையாக உருவாகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது.

The post கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் சிம்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simbu ,Karthik Thangavel ,Chennai ,Kamal Haasan ,Desingu Periasamy ,Dulquer Salmaan ,Ritu Varma ,Kannum Kannum Koloyadithif ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொரோனா குமார் படத்தில் நடித்து...