×

கர்நாடகா, ஆந்திராவில் குர்தா அணிவதற்கு எதிர்ப்பு மத்திய அரசை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் சித்தூரில் நடந்தது

சித்தூர் : சித்தூரில் முஸ்லிம்கள் மத்திய அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூரில் நேற்று முன்தினம் மத்திய அரசை கண்டித்து 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து சித்தூர் ஷெர்ஷா பிரான் மசூதியிலிருந்து ஹை ரோடு வழியாக பேரணியாக நடந்து சென்று காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முஸ்லிம் மைனாரிட்டி தலைவர் அப்சல்கான் பேசியதாவது: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு செல்லும்போது குர்தா அணிந்து செல்லக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.  முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இஸ்லாமிய பெண்கள் தனது மதத்தை கடைப்பிடித்து மதத்தில் இருக்கும் சொற்பொழிவுகளை கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறார்கள். குர்ஆனில் முஸ்லிம் பெண்கள் குர்தா அணிந்து வெளியே செல்ல வேண்டும். தனது முகத்தை மற்றவர்கள் யாரும் பார்க்கக்கூடாது என பல்வேறு மத நிபந்தனைகள் உள்ளன. இந்த மத நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு முஸ்லிம் பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கர்நாடக மாநிலத்தில் மண்டியா, உடுப்பி, மங்களூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குச் செல்லும் போது குர்தா அணிந்து சென்றார்கள். கல்லூரி மேலாளர் குர்தா அணிந்து செல்லக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் பல்வேறு முழக்கங்கள் ஈடுபட்டனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு  பொறுப்பேற்ற பிறகு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.இந்தியாவில் முஸ்லிம், ஹிந்து, கிரிஸ்டியன் ஆகிய மதத்தை சேர்ந்த மக்கள் அண்ணன் தம்பிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் நான்கு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் தோல்வி அடைந்துவிடும் எனக்கருதி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்களை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினால் ஹிந்துக்கள் அனைவரும் பாஜவுக்கு வாக்களிப்பார்கள் என கருதி இதுபோன்ற மதக்கலவரத்தை அரசு ஏற்படுத்தி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.  சித்தூர் மாநகரத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்கள் குர்தா அணிந்து செல்லும்போது யாராவது சர்ச்சையை ஏற்படுத்தினால் அமைதியாக இருக்க வேண்டும் என முஸ்லிம் மத சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு யாராவது சர்ச்சையை ஏற்படுத்தினால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கும், முஸ்லீம் மதத் தலைவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் காவல் நிலையத்தின் மூலம் புகார் தெரிவித்து சர்ச்சையில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டனை பெற்று தருவார்கள். முஸ்லிம் ஹிந்து அண்ணன் தம்பி போல் நம் சித்தூர் மாநகரத்தில் வாழ்ந்து வருகிறோம். அதேபோல் நாம் உயிரோடு இருக்கும் வரை அண்ணன் தம்பி போல் அனைத்து மதத்தினரும் பழகி பேச வேண்டும். யாரும் மத கலவரத்தில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.  பின்னர் முஸ்லிம் மைனாரிட்டி கமிஷனர் ஜிலானி ஹஜ்ரத்துக்கு புகார் மனுவை தபால் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகரிடம் புகார் மனு வழங்கினர். புகாரை பெற்றுக் கொண்ட சுதாகர், எஸ்பி செந்தில்குமார் மூலம் மாநில அரசுக்கு புகார் மனுவை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதில் ஜமியா மசூதி நசீப், இஸ்லாமிய குரு தலைவர்கள் இமாம் ஜிலானி, பைரோஸ், அப்துல் சுக்கூர், இப்ரஹிம் உள்பட ஏராளமான முஸ்லிம் மத தலைவர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்….

The post கர்நாடகா, ஆந்திராவில் குர்தா அணிவதற்கு எதிர்ப்பு மத்திய அரசை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் சித்தூரில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Muslims ,central government ,Kurta ,Andhra Pradesh, Karnataka ,Karnataka ,Andhra Pradesh ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்