×

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் மீது வழக்குப்பதிவு

சென்னை : அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராயபுரத்தில் உள்ள 49 வது வார்டில் பொதுமக்கள் வாக்கு செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக தொண்டர் மீது ஜெயக்குமார் தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டது. திமுக தொண்டரை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஊர்வலமாக இழுத்துச் சென்றது வீடியோ வெளியானது. இதையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடி கலகம் செய்தல், ஆபாசமாகப் பேசுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட  8 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல திமுகவினர் தன்னை தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுநரும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத 10 திமுகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்…

The post திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Ex-Minister ,Jayakumar ,chennai ,pundadarpet ,minister ,jayakkumar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி...