×

மதுரை தல்லாகுளம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது-பறக்கும் பாலம் கட்டுமான பணிக்காக தற்காலிக மாற்றம்

மதுரை : மதுரையில் நடந்து வரும் பறக்கும் பாலம் கட்டுமான பணிக்காக, தல்லாகுளம் பகுதியில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.மதுரைநத்தம் ரோட்டில் நடந்து வரும் பறக்கும் பாலம் கட்டுமான பணியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை குறைக்க, பாலம் பணிகள் நிறைவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுமென போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர். இந்த மாற்றம் நேற்று காலை முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.இதன்படி, அழகர்கோவில் சாலை நவநீதகிருஷ்ணன் கோயில் வீதி சந்திப்பு முதல் அவுட் போஸ்ட் வரை இருவழிப்பாதை சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தல்லாகுளம் கோகலே ரோடு வழியாக அய்யர்பங்களா, புதுநத்தம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றங்கள் இன்றி, அதே வழித்தடத்தில் செல்லலாம். ஆனால், பி.டி.ஆர். சிலை சந்திப்பிலிருந்து பாண்டியன் ஓட்டல் சந்திப்பிற்கு செல்ல வேண்டும். பீ.பி.குளம் சந்திப்பு, வடமலையான் மருத்துவமனை பகுதிகளிலிருந்து, கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள், பிடிஆர் சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் செல்ல அனுமதியில்லை. இவ்வாகனங்கள் எஸ்.பி.பங்களா சந்திப்பு, தாமரைத்தொட்டி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.அழகர்கோவில் மற்றும் மேலூர் சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் விஷால் டி மால் வழியாக செல்லலாம். அழகர்கோவில் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே ரோடு வழியாக வந்து, நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, தல்லாகுளம் பெருமாள் கோயில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர்கோவில் ரோடு, அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வந்து அழகர்கோவில் சாலை வழியாக செல்லலாம்.மேலூர் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே ரோடு வழியாக வந்து, கோகலே ரோடு, நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, தல்லாகுளம் பெருமாள் கோயில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர்கோவில் ரோடு, அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வந்து, அங்கிருந்து வலதுபுறம் திரும்பி, யூத் ஹாஸ்டல் வழியாக கக்கன் சிலை வந்து மேலூர் சாலைக்கு செல்ல வேண்டும்.இதேபோல், அழகர்கோவில் சாலையிலிருந்து தாமரைத்தொட்டி சந்திப்பினை கடந்து தல்லாகுளம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வந்து, அங்கிருந்து இடதுபுறமாக யூத் ஹாஸ்டல், கக்கன் சிலை சந்திப்பினில் வலதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, அவுட் போஸ்ட் சந்திப்பு வழியாக தல்லாகுளம் தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்லலாம்.மேலூர் சாலையிலிருந்து அழகர்கோவில் சாலைக்கு, தற்போது கக்கன் சிலை யூத் ஹாஸ்டல் வழியாக சென்று வரும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலை வந்து, வலதுபுறமாக திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக அழகர்கோவில் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளது.இதேபோல், மேலூர் சாலையிலிருந்து நத்தம் சாலைக்கு கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக சென்றுவரும் போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலை வந்தடைந்து, வலதுபுறமாக திரும்பி பாரதியார் பூங்கா, பிடிஆர் சிலை சந்திப்பு வழியாக நத்தம் சாலை செல்லலாம்.நத்தம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், பிடிஆர் சிலை சந்திப்பு செல்ல அனுமதியில்லை. இவ்வாகனங்கள் எஸ்.பி. பங்களா சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி, பாரதி உலா ரோடு, தாமரைத்தொட்டி சந்திப்பு வழியாக ரோஸ்கோர்ஸ் சாலை, கக்கன் சிலை சந்திப்பு வந்து, கோரிப்பாளையம் மற்றும் மேலூர் சாலை செல்லலாம்….

The post மதுரை தல்லாகுளம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது-பறக்கும் பாலம் கட்டுமான பணிக்காக தற்காலிக மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai Dallakulam ,Madurai ,Tallakulam ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!