×

அருமனை அருகே சாலையை கடந்த மலைபாம்பு பிடிபட்டது

அருமனை : அருமனை அருகே மழுவன்சேரி தெற்றிவிளை சாலையை நேற்று இரவு 7 மணி அளவில் ஒரு பெரிய மலைபாம்பு கடந்தது. இதை பார்த்த ஒருவர் சப்தம் போட்டார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் திரண்டனர். சாலையை கடந்த மலைபாம்பு ஓரிடத்தில் சுருண்டு கிடந்தது. இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்தனர். போலீசார் களியல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வன சரகர் வெங்கடாசல பூபதி உத்தரவின் பேரில் வன ஊழியர்கள் வந்து மலைபாம்பை பிடித்தனர்.அது சுமார் 10 அடி நீளம் இருந்தது. இதே போல் அருமனை அருகே பந்தல்விளை பகுதியில் அணலி பாம்பை பொதுமக்கள் புகாரின் பேரில் வன ஊழியர்கள் பிடித்து சென்றனர். …

The post அருமனை அருகே சாலையை கடந்த மலைபாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Aumana ,Mahuvanseri Street Road ,Anumana ,Dinakaran ,
× RELATED வேண்டிய காரியங்கள் அனைத்தும் கைகூடும் அனுமன் வழிபாடு..!!