×

இறந்த தம்பதியின் சொத்துகளை போலி ஆவணம் தயாரித்து ரூ25 கோடிக்கு விற்பனை: தந்தை, 2 மகன்கள் கைது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற தமிழர் குமார் கேசவன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் புதுச்சேரி வெங்கட்டா நகரில் வசித்து வந்தனர். சமீபத்தில் இந்த தம்பதி இறந்து விட்டனர். இந்நிலையில் இவர்களின் வாரிசுகள் குமார் ஆனந்த், குமார் வேல்ராஜ், குமார் சாந்தி, குமார் சுசி ஆகியோர் சொத்துக்களை நிர்வகித்து வந்தனர். இவர்கள் நால்வரும் பிரான்சில் வசிக்கின்றனர். இவர்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், நெடுங்காடு, செருமாவிலங்கையில் பூர்வீக சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்த உறவினர்கள் குணசேகரன்(65), இவரது தம்பி வெங்கடேசப்பெருமாள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மரணமடைந்த குமார் கேசவன்-சரஸ்வதி தம்பதிக்கு சொந்தமாக செருமாவிலங்கையில் உள்ள ரூ.25 கோடி மதிப்புள்ள பூர்வீக சொத்தை உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் வசிக்கும் தேவராஜ், அவரது மகன்கள் தேவராஜ் ஆனந்த், ஆதித்ய சுந்தரபாண்டியன் ஆகியோர் பெயர்களுக்கு உயில் எழுதியதை போல போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த போலி ஆவணத்தை தேவராஜின் மகன் ஆனந்த், பத்திர எழுத்தர் ஒருவரின் உதவியுடன் தயாரித்து 2020ம் ஆண்டு ஜூன் 16ம் ேததி திருநள்ளாறு உதவி பதிவாளர் அலுவலகம் மற்றும் புதுச்சேரி அடுத்த வில்லியனுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதைதொடர்ந்து போலி பதிவு மோசடி ஆவணங்கள் மூலம் செருமாவிலங்கையில் இருந்த சொத்துக்களை தேவராஜ், ஆதித்ய சுந்தரபாண்டியன் சேர்ந்து பலருக்கு விற்றதும் தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.25 கோடி என்று கூறப்படுகிறது.இதுதெரிந்ததால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன், திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிந்து தேவராஜ், அவரது மகன்கள் தேவராஜ் ஆனந்த், ஆதித்ய சுந்தரபாண்டியன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post இறந்த தம்பதியின் சொத்துகளை போலி ஆவணம் தயாரித்து ரூ25 கோடிக்கு விற்பனை: தந்தை, 2 மகன்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Karichakal ,Kumar Kesavan ,Nedavadam ,Karichakal district ,Thirunalalaru ,
× RELATED காரைக்காலில் ரூ.2 கோடியில் குப்பைகளை...