×

ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதில் தவறில்லை!: முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதில் தவறில்லை என முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜக முகவர் செய்தது தவறில்லை என  தெரிவித்தார். மேலூரில் பாஜக முகவர் செய்தது தவறில்லை. ஹிஜாப் எதிர்ப்பது நோக்கமல்ல. சாதாரண பெண்களைப்போல வரவேண்டும் என்பதே விருப்பம். இதில் என்ன தவறு இருக்கிறது. தேர்தல் ஆணையம் எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? நாளை வாக்கு எண்ணிக்கையின்போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? விமான நிலையத்தில் முகத்திரையை கழட்டி முகத்தைக் காட்டுங்கள் என தெரிவிக்கிறார்கள். அது சரியா தவறா? முகவர் தன்னுடைய கடமையை செய்து இருக்கிறார். எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரிதான். அவர் சில கேள்விகள் கேட்கும்போது அதிகாரிகள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் நாம். எங்களை பொறுத்தவரை பல இடங்களில் நடைபெற்றுள்ள திருத்த முடியாத அளவுக்கு உள்ள தவறுகள், பிரச்னைகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படாமலே உள்ளது என்று கூறினார். மதுரை மாவட்டம் மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதற்கு தேர்தல் அலுவலர்கள், பிற முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் அலுவலர்களிடமும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடமும் வாக்குவாதம் செய்த பாஜக முகவர் வெளியேற்றப்பட்டார்….

The post ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதில் தவறில்லை!: முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Former Union Minister ,Bonn Raadhakrishnan ,Madurai ,Malore ,Dinakaran ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...