×

ம.பி காங்கிரசுக்கு 2023 கடைசி தேர்தல்: மூத்த தலைவர் பேசிய வீடியோ வைரல்

போபால்: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மத்திய பிரதேச மாநிலம் ரத்லமில் கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், ‘மத்திய பிரதேசத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் நீங்கள் (கட்சியினர்) ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை என்றால், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தாண்டு தேர்தல் கடைசி தேர்தலாக இருக்கும். கட்சிப் பணியை மேற்கொள்ள ஆட்களை தேடும் நிலை ஏற்பட்டுவிடும். நீங்கள் ஒன்றாக உட்காரத் தயாராக இல்லை. நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்; நீங்கள் தனியாக நின்று கொண்டு உள்ளீர்கள்’ என்று கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, பாஜக செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் கூறுகையில், ‘திக்விஜய் சிங் தனக்கென ஒரு அணியை உருவாக்கி உள்ளார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்க முயற்சிகளை எடுத்து வருகிறார். அடுத்தாண்டு மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்காது என்பது திக்விஜய் சிங்குக்கு தெரியும். அதன்பிறகு மாநிலத்தில் கட்சியே இல்லாமல் போகும் என்றும் அவருக்குத் தெரியும்’ என்றார்….

The post ம.பி காங்கிரசுக்கு 2023 கடைசி தேர்தல்: மூத்த தலைவர் பேசிய வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : B Congress ,Congress ,Dikvijay Singh ,Madhra Pradesh ,Ratlam ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்