×

குஜராத் அரசு அடாவடி 30 ஆண்டு உழைத்தவருக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் குட்டு

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தின் அரசுத் துறையில் 30 ஆண்டுக்களுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதிய பலன்கள் மறுக்கப்பட்டது. இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றம் அவருக்கான ஓய்வூதிய பலன்களை அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு நீதிபதிகள் எம்ஆர்.ஷா, பிவி. நாகரத்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `ஒரு ஊழியரின் 30 ஆண்டு கால சேவையை பயன்படுத்திய பிறகு, அவருக்கான ஓய்வூதிய பலன்களை மாநில அரசு மறுப்பது நியாயமற்றது. அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கும்படி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது சரியே.  அவருடைய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post குஜராத் அரசு அடாவடி 30 ஆண்டு உழைத்தவருக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் குட்டு appeared first on Dinakaran.

Tags : Gujarat Govt ,Supreme Court ,Guttu ,NEW DELHI ,Gujarat state government ,Gujarat government ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...