×

பங்குதாரர்களுக்கு 4 ஆண்டுகளாக 300 கோடி கொடுக்காமல் இழுத்தடிக்கும் எலான் மஸ்க்: அதிகாரிகள் குடைச்சலால் புலம்பல்

டெட்ராய்ட்: உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.  புகழ்பெற்ற டெஸ்லா, விண்வெளி சுற்றுலாவை நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர். இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ₹31,500 தருவதாக கடந்த 2018ம் ஆண்டில் டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்தார். ஆனால், இந்த தொகையையும், கால தாமதத்துக்கான தொகையையும் மஸ்க் இதுவரை வழங்கவில்லை. இவற்றின் மொத்த மதிப்பே ரூ.300 கோடிதான். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த பணத்தை பங்குதாரர்களுக்கு வாங்கி கொடுப்பது தொடர்பாக மஸ்க்கிடம் பங்குச்சந்தை நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்நிலையில், இந்த தொகையை வாங்குவதற்காக மஸ்க்கை பங்குச்சந்தை நிறுவன அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், அவருக்கு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவருடைய வழக்கறிஞர்கள் சமீபத்தில் மான்ஹட்டன் மாவட்ட நீதிபதி அலிசன் நாதனிடம் புகார் அளித்தனர். இதை பங்குச்சந்தை நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் அதிகாரி ஸ்டீவன் புச்சோல்ஸ் எழுதியுள்ள கடிதத்தில், ‘எலான் மஸ்க்கை துன்புறுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது,’ என்று கூறப்பட்டுள்ளது….

The post பங்குதாரர்களுக்கு 4 ஆண்டுகளாக 300 கோடி கொடுக்காமல் இழுத்தடிக்கும் எலான் மஸ்க்: அதிகாரிகள் குடைச்சலால் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Detroit ,Tesla ,SpaceX ,Dinakaran ,
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...