×

லைகருக்கு பிறகு பூரி ஜெகன்நாத், சார்மி தயாரிக்கும் படம்

ஐதராபாத்: பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் தயாரிப்பில் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ தொடக்க விழா நடைபெற்றது. பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ராம் பொதினேனி நடித்த ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தில் தயாரிக்கவுள்ளனர். ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் தொடக்க விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. சார்மி கிளாப் போர்டு அடிக்க, பூரி ஜெகன்நாத் ஹீரோ ராம் பொதினேனியின் முதல் காட்சியை இயக்கினார்.

இதில், ‘ஐஸ்மார்ட் ஷங்கர் அலைஸ் டபுள் ஐஸ்மார்ட்’ என்ற வசனத்துடன் படமாக்கப்பட்ட முதல் காட்சியில் ராம் படத்தின் பெயரை சொன்னார். இம்மாதம் 12ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் முழுநீள ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிறது. இதற்கு முன் பூரி ஜெகன்நாத்தும் சார்மியும் இணைந்து லைகர் படத்தை தயாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post லைகருக்கு பிறகு பூரி ஜெகன்நாத், சார்மி தயாரிக்கும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Charmi ,Hyderabad ,Puri Jegannath ,Ban ,Ram Podhineni ,Charmy Kaur ,Ram Patineni ,Puri Jehannath ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமாகி விட்டது: ராஷ்மிகா பேட்டி